search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடும் திட்டம்"

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
    • உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கந்தசாமிபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அந்தோணி கண்ணன்,

    தொண்டரணி துணை செயலாளர் ராமர், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் , விஜயராஜ், கவுன்சிலர்கள் கற்பக கனிசேகர், ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோனி பிரகாஷ்மார்சல், தெய்வேந்திரன், வட்டச் செயலாளர் சதிஷ் குமார், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ்,

    போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பர்ட், பிரதிநிதிகள் பிரபாகர் லிங்க ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி முழுவதும் 400 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MinisterMRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்பிழியும் எந்திர மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்திரனராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, எண்ணெய்பிழியும் எந்திர மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

    வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் ரூ.3.91 லட்சம் வழங்கப்பட்டு அதனோடு அரசு மானியமாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு மொத்தம் ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது.


    இதில் எண்ணெய் பிழியும் எந்திரம், எண்ணெய் வடிகட்டும் எந்திரம் மற்றும் எண்ணெய் நிரப்பும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான முறையில் இங்கு கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் பிழிந்து தரப்பட உள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் இந்த மையத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கானகத்துக்குள் கரூர் என்ற அடிப்படையில் அதிக அளவில் ஆலம், அரசு, பனை மற்றும் நாட்டு மரங்களை நடவு செய்ய இந்தத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பொதுமக்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, வேளாண்மை பொறியியல்துறை செயல்பொறியாளர் ராஜ்குமார், உதவி இயக்குனர் கந்தசாமி அரவக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர் குழு தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterMRVijayabaskar
    மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைத்தார்.
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யான் எனும் இடத்தில் மாநிலம் முழுதும் இந்த ஆண்டுக்கு 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து, பட்னாவிஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :-

    ’இயற்கைக்கு தொண்டாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டு 2 கோடி மரக்கன்றுகளையும், 2017-ம் ஆண்டு 5 கோடி மரக்கன்றுகளையும் வெற்றிகரமாக நட்டு முடிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 16 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இது மிகப்பெரிய சவால் என்று எனக்கு தெரியும் ஆனால், நமது பலம் இதை விட பெரியது. எனவே, நாம் அனைவரும் ஒன்றினைந்து மரக்கன்று நடும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
    ×